Monday, January 31, 2011

இறப்பு...



















ஆறும் அறியா,
அறுபதும் அறியா,

மண்டியிட்டு மன்றாடியும்
மலைபோல் கடமையில்...

எக்காலத்திலும் வெற்றியை
மட்டும் தனக்கு கொண்டு
தோல்வியும்,இழப்பையும்
தர்மம் செய்யும்
வள்ளலாய்...

ஈராயிரம் ஆண்டுகள்
முதுமை,
ஆனாலும்
தினம் தினம்
இறக்கமற்ற கொடூர
அவதாரத்தோடு...

யார் அனுமதியின்றி
உடலயும் உயிரயும்
பாகப்பிரிவினை
செய்வதில்
திறமைசாலி!!!

கொடுயவர்களோடு
நல்லவர்களையும்
விழுங்குபவனாய்...
அதில் சிலருக்கு
தீபாவளியாக...
சிலருக்கு
அமாவாசை இருளாக...!!!

No comments:

Post a Comment