
உன் தேசத்தோடு
என்னையும்
காதலிக்கும்
உனக்காக
மனதை மட்டும்
அனுப்பி வைக்கிறேன்
கடல்தாண்டி...
கடல்தாண்ட என்னுகையில்,
என் கடமைகளோ
நானில்லாமல்
பரிதவித்து போகின்றனவே!!!
இது சாத்தியமா
எனும்
கேள்விக்கு,
நான் தரும் பதில்
இல்லையென்று தெரிந்தும்...
உன் அன்புகொண்ட நட்புகாக
என்னையறியாமல்
கடல்தாண்டி விட்டதே
என் அரியாமனது!!!
ஒத்த சொல்லெனும்போது
பூரித்த மனம்
அதை
இருவிழியாக
பிரிக்கும்பொழுது
சற்று
குழம்பவே செய்கிறது...
இருப்பினும்,
இரு விழியை
ஒரு சொல்லாக
எண்ணி
என் நினைவுகள்
என்றும்
உன்னோடு
கைக்கோர்த்து
ஒரு வழி நடக்கிறதை
நான்
உணரத்தான்
செய்கிறேன்...
உனக்கு?............
![]() |

No comments:
Post a Comment