Monday, February 21, 2011


எத்தனை கர்வம்
உனக்குள்?
எட்டா உயரத்தில்
ஊற்றாய் இருப்பதாலா? ...
சின்னஞ்சிறு
நுண்ணுயிர்களுக்குள்ளும்
வண்ணங்களாய் இருப்பதாலா?...

படைப்பாலியில்லா
படைப்பென்றே
பெருமிதக்கண்ணியே,
நீலவானமாய் கடலோடு
காதல் உண்டோ?...

மிகையில்லா அழகால்
குறையாத கர்வம்
கொண்டாளே,
உன்னழகு மேன்மையாவதே
என்னவன் உன்னை ரசிப்பதால்தான்<3<3<3


Wednesday, February 16, 2011

உன் சுவாசமாய் நான்...














என்
உயிர்பிரியும்
வேளையில்...
ஒரே ஒரு
நொடிகொடு
எனக்காக
உன்
மார்சாய்ந்துகொள்ள...
நெடுநாள்
ஆசைக்காக
மட்டும் அல்ல
என்னுயிர்
உன்னிதயத்தோடு
சங்கமாவதற்கும்தான்...
அத்தருணம்
மலரின் வாசத்தைபோல்
உன்னுயிரோடு
என்னுயிர்
கலந்திருபேன்
உன் சுவாசத்தின்
ஒரு பாகமாய்...

Saturday, February 12, 2011





குளுமையில் 
இமைகள்
கனக்கின்றன
தூக்கத்தால்
அல்ல
துக்கத்தால்!!
உறிமையுண்டு
காதலுமில்லை,
கண்ணீர் துடைக்க
தோளுண்டு
நட்புமில்லை...
நன்னாள் தேடுகிறேன்....
பெயரில்லா நம் உறவிற்கு
பெயர் சூட்ட!!




துர்ரதிஷ்டசாலிதான்!!!

சொல்ல முடியா
வார்த்தைகள் கோடி,
பேச மொழியில்லா
ஊமையப்போல்..!!!

உன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு
தயங்கிய கண்ணீர்கூட
தயங்காமல்,
என் கண்ணங்களை
ஈரமாக்குகிறதே...!!!

சிதறாத சிந்தனைகூட
சிதறுகிறது...
என்னால் ஆன
உன் இரணங்களைக் கண்டு...

என் வார்த்தைகளே
என் மனதைமட்டுமல்லாமல்
வார்தைகளையும் தீராத
காயத்திற்குள்ளானதை
எப்படி புறிய வைப்பேன்?...

சொல்லத் துடிக்கும்
உதடுகளை
ஏதொ ஒன்று தடுக்கிறது...

தினம் தினம் ஒரு புதிரோடு
நம் விளையாட்டு,
வலியோடு சந்தோஷம்தான்
வலி மனதிற்கும்
சந்தோஷம் உதட்டிற்கும்...

புரண்டது உனது வாழ்க்கை
மட்டுமல்ல
என்னுடையதும்தான்...

யாருக்கும் திறவாத உன் மனக்கதவு
எனக்கென வரவேற்றதில்
நான் அதிர்ஷ்டசாலியே!
இருப்பினும்,
உள்நுழைய தகுதியில்லா
துர்ரதிஷ்டசாலிதான்.....♥   




நீ + நான்...

நீ எனைவிட்டு
நீண்டதூரம் போவாதையே மனம் விரும்புகிறது...
நீண்ட இடைவெளியால்
நம்மிரு இதயங்களும்
நெருக்கமாகின்றதை உணர்கிறேன்!!!
நீ தூரமாகவே போய்விடு...
நீ சிந்தும் கவிதைகளுக்கெல்லாம்...
நான் கவியாகிறேன்
நம் நீண்ட இடைவெளியால்♥♥♥

வருவாயென!!!

நான் நானாயிருக்க 
சுயனலமுல்லவளல்ல...!!!
மாய உலகத்திலும்,
உண்மையில்லா பொய்களுக்குள்ளும்
மாற்றமில்லா
நிறந்தரத்தைத் தேடுகிறேன்...!!!

வழி காட்டவும்,
வழி துணையாகவும்
முன்னிருக்காமல்
பின் தொடரும்
உன் நிழல் தேவையில்லை...
குழந்தைக்குக் கைகொடுத்துத்
துணையாக ஒரு தாய்
போதுமே...
வழிகாட்டத் தோள்கொடுக்கும்
ஒரு நட்பு போதுமே!!!

நான் பின் தொடரும்
நிழலாக விரும்பவில்லை...
தோள்கொடுக்கும் தோழியாய்
மட்டுமே போதும்...!!!

மணல்வீடு என்றபின்னும்
நட்புக்கோட்டை
கட்டுகிறேன்...
அலைவந்து அள்ளுவதற்குள்
வருவாயென!!! 




பெண்ணுக்கே உரிய
மொளனத்தை நான் மட்டும்
துறந்து விட நான் விதிவிளக்கல்லவே...!
இலகுவாய் திறக்க
இது மணற்கதவல்ல,
என் மனக்கதவு...!!!

ம்ம்ம்....
கறைப்போர் கறைக்கையில்
கறையத்தானே வேண்டும்...!

என் காலம்
எனக்கு பதில் சொல்லுகையில்,
நானும் வருவேன் என்
மொளனத்தைத் துறந்து
பதிலோடு...........♥







நீ மட்டும்.....

கை கோர்த்து நடக்க...
உன் கைகள் 
என்னருகில் இருத்தல் 
வேண்டும்...
தோள் சாய்ந்துக்கொள்ள...
உன் தோள்கள் 

எப்போதும் 
வேண்டும்...
என் கண்ணீரைத் துடைக்க...
உன் ஈடில்லா 

அன்பு வேண்டும்...
என் வாழ்வை 

முழ்மையாக்க
உன் காதல் வேண்டும்...
என் ஆயுள்வரை நீ,
நீ மட்டுமே 

என்னருகில் 
எல்லாமுமாய் வேண்டும்...

Saturday, February 5, 2011





















உன் தேசத்தோடு
என்னையும்
காதலிக்கும்
உனக்காக
மனதை மட்டும்
அனுப்பி வைக்கிறேன்
கடல்தாண்டி...

கடல்தாண்ட என்னுகையில்,
என் கடமைகளோ
நானில்லாமல்
பரிதவித்து போகின்றனவே!!!

இது சாத்தியமா
எனும்
கேள்விக்கு,
நான் தரும் பதில்
இல்லையென்று தெரிந்தும்...

உன் அன்புகொண்ட நட்புகாக
என்னையறியாமல்
கடல்தாண்டி விட்டதே
என் அரியாமனது!!!

ஒத்த சொல்லெனும்போது
பூரித்த மனம்
அதை
இருவிழியாக
பிரிக்கும்பொழுது
சற்று
குழம்பவே செய்கிறது...

இருப்பினும்,

இரு விழியை
ஒரு சொல்லாக
எண்ணி
என் நினைவுகள்
என்றும்
உன்னோடு
கைக்கோர்த்து
ஒரு வழி நடக்கிறதை
நான்
உணரத்தான்
செய்கிறேன்...

உனக்கு?............